டெல்லியில் பிரியங்கா காந்தி அவரது நேரத்தை வீணடிக்க கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் பிரசாரங்களின் மூலம் அவரது நேரத்தை வீணடிக்க கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-05-08 10:40 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் தேர்தல் பிரசாரங்களின் மூலம் அவரது நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார். அதனால் காங்கிரஸ் கட்சி தனது டெபாசிட்டை இழக்கும்.

அவர் ஏன் ராஜஸ்தானிலோ, மத்தியப் பிரதேசத்திலோ பிரசாரம் செய்வதில்லை?  டெல்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார். 

பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதும் இடங்களுக்குச் சென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏன் பிரசாரம் செய்வதில்லை?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்