ஐந்தாம் கட்ட தேர்தல்: 62.56 சதவீதம் வாக்குப்பதிவு

ஐந்தாம் கட்ட தேர்தலில் 62.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2019-05-06 17:18 GMT
புதுடெல்லி,

இன்று 5-வது கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ, சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடந்த 7 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த 7 தொகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. 51 தொகுதிகளிலும் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.

இதன்படி இன்று நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 62.56  சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.   

அதில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி, ஜார்கண்ட் - 63.72 சதவீதம், மேற்கு வங்கம் - 73.97 சதவீதம், மத்தியப் பிரதேசம் - 62.60 சதவீதம், உத்தரப் பிரதேசம் - 57.33 சதவீதம், பீகார் - 57.86 சதவீதம், ராஜஸ்தான் - 63.75 சதவீதம், அனந்த்நாக் - 8.76 சதவீதம், லடக் - 63.76 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மேலும் செய்திகள்