எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது. அதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கிராமங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. இதில் இருவர் காயம் அடைந்தனர். ஒரு ராணுவ வீரரும் காயம் அடைந்தார். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானுக்கும் இழப்பு நேரிட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படை பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடத்திய பின்னர் எல்லையில் ராஜோரி மற்றும் பூஞ்ச் செக்டாரில் 4 ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.