குப்பையில் கிடந்த மொபைல் போன் பேட்டரியை எடுத்து விளையாடியதில் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம்

குப்பையில் கிடந்த காலாவதியான மொபைல் போன் பேட்டரியை எடுத்து விளையாடியதில் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2019-05-05 05:51 GMT
திருப்பதி,

ஆந்திராவில் சித்தூர் நகரில் குரபலகோட்டா பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சகோதரர்கள் ஷேக் சையது (வயது 10) மற்றும் ஷேக் மவுலாலி (வயது 8).

இவர்கள் தங்களது வீட்டின் அருகே கிடந்த குப்பை கிடங்கில் இருந்து மொபைல் போன் பேட்டரியை எடுத்து விளையாடி உள்ளனர்.  வீங்கியிருந்த அந்த பேட்டரி வெயிலில் சூடேறி இருந்துள்ளது.  இந்நிலையில், திடீரென அது வெடித்து உள்ளது.  இதனால் சிறுவர்களின் முகம், கைகள் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இதன்பின் அங்கிருந்து ரூயா அரசு பொது மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று குரபலகோட்டா பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணனின் மகன்கள் சதீஷ் மற்றும் செந்தில்குமார். இருவரும் செல்போனை சார்ஜில் இருந்தவாறே பயன்படுத்தியுள்ளனர். அப்போது செல்போன் பேட்டரி வெடிக்க, இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறுவர்கள் இருவரும் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்