குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பிரியங்காவிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்- ஸ்மிருதி இரானி

குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பிரியங்காவிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறி உள்ளார்.

Update: 2019-05-02 09:25 GMT
அமேதி

உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில், காங்கிரஸ்  கட்சி தலைவரும் தனது சகோதரருமான ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக சென்றார் பிரியங்கா. அப்போது  30 க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் பிரியங்காவை சூழ்ந்து கொண்டு, உற்சாகமாக முழக்கமிட்டனர். 

பின்னர், காவலாளி ஒரு திருடன் என பொருள்படும் 'சோக்கிதார் சோர் ஹே' என முழக்கமிட்டனர். அதனை கேட்ட பிரியங்கா வாயடைத்து நின்றார். பின்னர் சிறுவர்களிடம், நீங்கள் சொல்வது சரியானது அல்ல. நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

இந்த வீடியோ  வைரலாகியது. சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதிலடி கொடுத்து காங்கிரசை விமர்சித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:-

பிரியங்கா காந்தி  குழந்தைகளை தவறாக பயன்படுத்துகிறார். அவர் பிரதமரை அவதூறு  செய்யும்படி குழந்தைகளைக் கேட்டார். நீங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்த கூடாது.

குழந்தைகள் எதைக் கற்றுக்கொள்வார்கள். பிரியங்கா காந்தியிடம் இருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அனைத்து குடும்பங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேசத்தில் தனது தோல்வியை தவிர்க்க போராடுகிறது. இது தான் அவரது உண்மை முகம். பிரியங்கா காந்தி பிரதமரையும், மாநில முதல்வரையும் அவமதிக்கிறார் என கூறினார்.

மேலும் செய்திகள்