மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.6 உயர்வு

மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.6 உயர்ந்தது. சமையல் கியாஸ் விலை, மாதந்தோறும் 1–ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-05-02 00:00 GMT

புதுடெல்லி,

நேற்று மானிய கியாஸ் விலையும், மானியம் அல்லாத கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டன.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதன் விலை சிலிண்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை சிலிண்டருக்கு ரூ.722–ல் இருந்து ரூ.728 ஆக உயர்ந்தது.

இதுபோல், மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர் விலை 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை ரூ.484.02 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலையும் கிலோ லிட்டருக்கு ரூ.1,595.63 உயர்ந்தது. இது, 2.5 சதவீத விலை உயர்வாகும். கிலோ லிட்டருக்கு 65 ஆயிரத்து 67 ரூபாயாக இதன் விலை உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 3–வது மாதமாக, விமான எரிபொருள் விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரே‌ஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணையின் விலை, லிட்டருக்கு 25 காசு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்