காவல்துறை அதிகாரி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரிய பெண் சாமியார் சாத்வி பிராக்யா

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே குறித்து தாம் கூறிய கருத்தை திரும்பப் பெறுவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் பாஜக பெண் சாமியார் சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-20 06:39 GMT
மும்பை,

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தம்மை கைது செய்து சித்ரவதை செய்த கார்கரே தமது சாபத்தால்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பிராக்யா கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.

அசோக சக்ரா விருது பெற்ற கார்கரே குறித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததையடுத்து, சாத்வியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என்று மறுப்பு தெரிவித்து பாஜக அறிக்கை வெளியிட்டது.

இதனால் தமது கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கோருவதாக சாத்வி பிராக்யா அறிவித்துள்ளார். "எதிரி நாட்டின் தீவிரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்களால் பலியான கார்கரே நிச்சயமாக நாட்டுக்காக உயிரைத் தந்த வீரர்தான்" என்று சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்