அசம்கார் தொகுதியில் அகிலேஷ் யாதவ் 18–ந் தேதி வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Update: 2019-04-14 16:36 GMT
அசம்கார்,

நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போஜ்புரி நடிகர் தினேஷ்லால் யாதவ் போட்டியிடுகிறார். மே 12–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கும் அங்கு நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

அகிலேஷ் யாதவ், 18–ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக, அவர் மகா கூட்டணி மூத்த தலைவர்களுடன் வாகன பேரணியாக செல்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்