நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்; 3 மணி நிலவரப்படி சராசரி வாக்கு சதவீதம் வெளியீடு

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி சராசரி வாக்கு சதவீதம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-04-11 11:56 GMT
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ந்தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.  இதில், முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 3 மணி நிலவரப்படி நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான சராசரி வாக்கு சதவீத தகவல்கள் வெளிவந்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் 50.86 %, உத்தரகாண்டில் 46.59 %, மணிப்பூரில் 68.90 %, லட்சத்தீவில் 51.25 %, நாகலாந்தில் 68 %, தெலுங்கானாவில் 48.95 %, அசாமில் 59.5 %, மேகாலயாவில் 55 %, மிசோரமில் 55.20 %, திரிபுரா மேற்கு 68.65 %, மேற்கு வங்காளத்தில் 69.94 %, மகாராஷ்டிராவில் 46.13 % ஜம்மு மற்றும் காஷ்மீரில் 46.17 %, ஆந்திர பிரதேசம் 55 %, அருணாசல பிரதேசம் 50.87 %, சிக்கிம் 55 % அளவிலான வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மேலும் செய்திகள்