சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு

டாக்டர்கள் கொண்ட மருத்துவக்குழு அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் தங்களை விசாரிக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

Update: 2019-04-10 06:54 GMT
புதுடெல்லி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், தங்களது தரவுகளை தவறாக புரிந்து கொள்வதாக அப்பல்லோ  மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது.

எனவே  டாக்டர்கள்  கொண்ட மருத்துவக்குழு அமைத்து தங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடியானது.

இதை அடுத்து இன்றும், நாளையும் அப்போலோ மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில்  அப்பல்லோ  நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளதால், சம்மன் பெற்ற யாரும் ஆஜராகவில்லை. மேல்முறையீடு காரணமாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணை காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்