ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது : மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உயிர் தப்பினார்
பீகார் மாநிலம் பெலகஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.
கயா,
பீகார் மாநிலம் பெலகஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பீகார் துணை முதல் மந்திரி சுஷில் மோடி ஆகியோர் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.
அப்போது மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் அந்த ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ராம்விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.