பொய் சொல்ல முடியாத அளவுக்கு மோடி வாயில் மக்கள் பிளாஸ்திரி ஒட்டுவார்கள் - மம்தா பானர்ஜி

ஆட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி எறியுங்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.

Update: 2019-04-08 15:22 GMT


கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலம் நகரகடாவில் பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.  

மோடி, கடந்த நான்கரை ஆண்டுகளாக உலகம் சுற்றிக் கொண்டிருந்தார். விவசாயிகளையோ, நடுத்தர மக்களையோ கவனிக்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தின்போது மக்கள் மரணமடைந்த போதும், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இப்போது, தேர்தல் நெருங்கியவுடன், அவர் எல்லோரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

பொய் சொல்வதில் போட்டி வைத்தால், அவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். இப்படி பொய் பேசும் பிரதமரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. மேலும் பொய் சொல்ல முடியாத அளவுக்கு மோடி வாயில் மக்கள் பிளாஸ்திரி ஒட்டுவார்கள் என்றார். 

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மம்தா பானர்ஜி, நாட்டு நலனுக்காக, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து மட்டுமின்றி, அரசியலில் இருந்தும் தூக்கி எறியுங்கள் என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்