தேசத்துரோக சட்டத்தை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி: ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தாக்கல்

தேசத்துரோக சட்டத்தை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-08 02:14 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் 124-ஏ நீக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததற்காக கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இவ்வழக்கு ஏப்ரல் 16 அன்று விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்