தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமர் யார் என தெரியவரும் ப.சிதம்பரம் பேட்டி

தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமர் யார் என தெரியவரும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2019-04-06 22:45 GMT
மதுரை,

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் தமிழ் மொழி பெயர்ப்பை மதுரையில் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலுக்கு பின்னர்தான்...

நாட்டை வளமாக்கி அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் நோக்கம். கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல் இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்.

தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமர் யார்? என்பது தெரிய வரும். இளைய தலைமுறை தலைவர், ராகுல்காந்தி. அவர் புதிய சிந்தனையாளர். அவரது தலைமை இந்தியாவுக்கு புது வழிகாட்டியாக அமையும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நடுத்தர, சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் உண்மையான ஜி.எஸ்.டி. அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும் போது, தமிழகத்திற்கு ராகுல்காந்தி 12-ந் தேதி வருகிறார். அவர் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 4 தொகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்” என்றார்.

மேலும் செய்திகள்