‘காலாவதியான பிரதமர்’ என்ற மம்தாவின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ‘காலாவதியான பிரதமர்’ என்று தன்னை விமர்சனம் செய்ததற்கு பிரதமர் மோடி பதிலை கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை ‘காலாவதி பாபு’ என்று மம்தா பானர்ஜி விமர்சித்து இருந்தார். அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியளித்த போது பிரதமர் மோடி பதில் அளிக்கையில், பூமியில் பிறந்த எல்லோருக்கும் காலாவதி தேதி இருக்கிறது. எனது காலாவதி தேதி எனக்கு தெரியாது. மம்தாவுக்கு தெரிந்தால் சொல்லட்டும். பிரதமர் பதவி காலாவதி ஆவது பற்றி 130 கோடி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மம்தா, ஆட்சிக்கு வந்ததில் இருந்து மேற்கு வங்காளத்தில் வன்முறை அதிகரித்து விட்டது. இது, ஜனநாயகத்துக்கு கவலை அளிக்கக்கூடியது. பரம்பரை அரசியல் நல்லதல்ல என்று கூறினார்.