நாடாளுமன்ற தேர்தல்; கமல்நாத் மகன் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்த்வாரா தொகுதியில் போட்டி

மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மகனுக்கு காங்கிரஸ் கட்சி சிந்த்வாரா மக்களவை தொகுதியை ஒதுக்கியுள்ளது.

Update: 2019-04-04 11:23 GMT
புதுடெல்லி,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.  ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தலும், ஏப்ரல் 23-ம் தேதி மூன்றாம் கட்டத்தேர்தலும், ஏப்ரல் 29-ம் தேதி நான்காம் கட்டத்தேர்தலும், மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டத்தேர்தலும், மே 12-ம் தேதி ஆறாம் கட்டத்தேர்தலும், மே 19-ம் தேதி ஏழாம் கட்டத்தேர்தலும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இவரது மகன் நகுல் நாத்.  மத்திய பிரதேசத்திற்கான 12 மக்களவை வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இதில் நகுல்நாத்திற்கு சிந்த்வாரா தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று காங்கிரஸ் காரிய குழு உறுப்பினர் அருண் யாதவுக்கு கந்த்வா தொகுதியும், விவேக் தங்கா என்பவருக்கு ஜபல்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.  காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 369 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்