எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல், ராணுவ அதிகாரி, சிறுமி உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரியும், சிறுமியும் உயிரிழந்தனர்.

Update: 2019-04-01 11:45 GMT
ஜம்மு, 

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லைக் கிராமங்களை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தானின் அடாவடிக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலில் 6 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி மற்றும் சோபியா என்ற 5 வயது குழந்தையும் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாகிஸ்தான் தொடர்ந்து கிருஷ்ணாகாதி, கெர்னி, மன்கோடே, குல்பூர், தேக்வார் ஷாக்பூர், பூஞ்ச் செக்டார்களில் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்