சிறந்த முதல்-மந்திரி பட்டியலில் சந்திரசேகரராவுக்கு முதலிடம்: சர்வேயில் தகவல்

சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Update: 2019-03-23 10:52 GMT
ஐதராபாத்:

இந்தியாவில் உள்ள முதல்-மந்திரிகளில் சிறப்பாக செயல்படுபவர் யார் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.அந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.சிறந்த முதல்-மந்திரிகள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திர சேகரராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயல்படுவதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த 68.3 சதவீத மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

இமாச்சலபிரதேச முதல்- மந்திரி ஜெய்ராம் தாகூர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 3-வது இடத்துக்கு வந்துள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்தில் உள்ளார்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த முறை நடந்த கருத்து கணிப்பில் முதன்மை இடங்களில் இருந்தார். இந்த தடவை அவர் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்-மந்திரி ராவத்துக்கு அவர்களது மாநிலங்களில் எதிர்பார்த்த ஆதரவு இல்லை.

மேலும் செய்திகள்