டைரி விவகாரம்: காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியா -எடியூரப்பா பதில்

வருமான வரித்துறை டைரி விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியா இது என பதில் அளித்துள்ளார்.

Update: 2019-03-22 11:07 GMT
பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது பா.ஜனதா தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார் என வருமான  வரித்துறையில் சிக்கிய டைரியில் தகவல் உள்ளது என பத்திரிக்கை செய்தி வெளியாகியது. மொத்தம் ரூ. 1,800 கோடி சென்றுள்ளது என குறிப்பிடப்பட்ட செய்தியை மையப்படுத்தி, விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இப்போது இதற்கு பதிலளித்துள்ள எடியூரப்பா, “இது காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியாக்கள்தான்,” என பதிலளித்துள்ளார்.

மோடியின் புகழ் அதிகரித்து வருவதால் காங்கிரஸ் விரக்தியில் உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே தோல்வியை தழுவிவிட்டனர். ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். வரவிருக்கும் தேர்தல்களில் லாபம் அடைய  ஊடகங்களில் அவர்களுடைய கதையை பரப்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் பொருத்தமற்றது மற்றும் தவறானது.

இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கை பதிவு செய்ய  மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையை மேற்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்