‘நானும் காவலாளிதான்’ பிரசாரம்: பா.ஜனதா மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடி, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை தொடங்குமாறு பா.ஜனதாவினரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவர் உள்பட பா.ஜனதாவினர் பலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘சவுகிதார்’ (காவலாளி) என்று சேர்த்துக் கொண்டுள்ளனர்.
லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சி தவைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘கடந்த 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, டீ வியாபாரியாக இருந்த மோடி, தற்போது காவலாளி ஆகிவிட்டார். அவரது ஆட்சியில் இந்தியா அடைந்த மாற்றத்தை இது காட்டுகிறது. பிராவோ..’’ என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோல், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘உரத்திருட்டை தடுக்கக்கூடிய காவலாளி யாராவது இருக்கிறாரா? ரபேல் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக தண்டிக்கும் பொறுப்பு இந்த காவலாளிக்கு இருக்கிறதா?’’ என்று கேட்டுள்ளார்.