நாடாளுமன்ற தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 11–ந் தேதி தொடங்கி மே 19–ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
ஆந்திரா, தெலுங்கானா, அசாம், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் ஏப்ரல் 11–ந் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 25–ந் தேதி கடைசி நாள் ஆகும்.