மங்களூரு கடல் பகுதியில் விஞ்ஞானிகளுடன் சென்ற ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து
மங்களூரு கடல் பகுதியில் விஞ்ஞானிகளுடன் சென்ற ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூரு கடல் பகுதியில் 16 விஞ்ஞானிகள் மற்றும் 30 சிப்பந்திகள் சென்ற ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விக்ரம் மற்றும் ஷூர் ஆகிய கப்பல்கள் ஈடுபட்டன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, மங்களூரு துறை முகத்துக்கு ஆராய்ச்சி கப்பல் கொண்டு வரப்பட்டது.