‘பினாகா’ ராக்கெட் சோதனை வெற்றி

பினாகா ராக்கெட் சோதனை வெற்றிபெற்றது.

Update: 2019-03-11 17:52 GMT
ஜெய்ப்பூர்,

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘பினாகா’ ராக்கெட் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இச்சோதனை நடந்தது. அப்போது ‘பினாகா’ ராக்கெட் இலக்கை துல்லியமாக தாக்கியது.

இலக்கை குறி வைத்து வழிநடத்தும் தொழில் நுட்பம் கொண்ட பினாகா ராக்கெட்கள், அதற்கான ஏவு எந்திரத்தில் இருந்து ஏவப்படக்கூடியவை. ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்தும் ஏவும் தொழில் நுட்பத்தை இந்திய ராணுவ தளவாட ஆய்வகம் உருவாக்கி உள்ளது.

மேலும் பினாகா ராக்கெட், வழிகாட்டும் வசதிகள் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்பு உள்பட மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்டது ஆகும்.

மேலும் செய்திகள்