பாகிஸ்தான் பிரச்சினைகளை திசை திருப்ப இந்திய உள்விவகாரங்களை பேசும் பழக்கம் கொண்டவர் இம்ரான்கான் - மத்திய அரசு குற்றச்சாட்டு
பாகிஸ்தான் பிரச்சினைகளை திசை திருப்ப, இந்திய உள்விவகாரங்களை பேசும் பழக்கம் கொண்டவர் இம்ரான்கான் என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, மக்களை பிரிக்கும் எண்ணம் கொண்டவர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி இருப்பது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
இந்திய உள்விவகாரங்களை பற்றி பேசும் பழக்கம் கொண்டவர், இம்ரான் கான். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள இம்ரான்கான், அதை திசைதிருப்புவதற்காக இதுபோன்று பேசுகிறார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, இந்தியாவில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுரை சொல்வது வேடிக்கையானது. இவ்வாறு ரவீஷ் குமார் கூறினார்.