மகளிர் தினத்தையொட்டி 52 விமானங்களை பெண்களே இயக்குகிறார்கள் ஏர் இந்தியா அறிவிப்பு
மகளிர் தினத்தையொட்டி 52 விமானங்களை பெண்களே இயக்குகிறார்கள் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஏர் இந்தியா நிறுவனம் 52 விமானங்களை பெண்களே இயக்குவார்கள் என அறிவித்துள்ளது. நியூயார்க், வாஷிங்டன், லண்டன் உள்பட 12 சர்வதேச விமானங்கள் மற்றும் 40–க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்க உள்ளனர். இவற்றில் விமானி மற்றும் சிப்பந்திகள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்வினி லோஹானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.