நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான நிலை காணப்பட்டதால் தேர்தல் அறிவிப்பு தாமதமாகிறது என தகவல் வெளியாகியது. இதற்கிடையே பிரதமர் மோடி தன்னுடைய நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் முடிக்கும் வரையில் தேர்தல் அறிவிக்கை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
மார்ச் 7-ம் தேதி ஆகும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அனைத்து நிலையிலும் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. ஏப்ரல்- மே மாதங்களில் 7-8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம். இவ்வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தேர்தல் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.