பாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார்? மோடிக்கு ராகுல் கேள்வி

பாகிஸ்தான் உளவுத்துறையை பதன்கோட்டிற்கு அழைத்தது யார்? என மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-03-07 09:28 GMT
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்தது தொடர்பாக கேள்விகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளை பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என அவர்களை குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் ஆதாரங்களை கேட்கும் எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி பாகிஸ்தானின் ‘போஸ்டர் பாய்ஸ்’ என விமர்சனம் செய்தார்.

இதனை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் சென்றது யார்? பாகிஸ்தான் உளவுத்துறையை இந்தியாவிற்கு அழைத்தது யார்? என கேள்வியை எழுப்பியுள்ளார். 

“நவாஸ் செரீப் குடும்பத்தின் திருமண விழாவிற்கு பாகிஸ்தான் சென்றது யார்? பதன்கோட் விமானப்படை தளத்திற்கு பாகிஸ்தான் உளவுத்துறையை அழைத்தது யார்? பின்னர் யார் பாகிஸ்தானின் போஸ்டர் பாய்?,” என பிரதமர் மோடிக்கு கேள்வியை எழுப்பியுள்ளார். 2015-ம் ஆண்டு நவாஸ் செரீப்பின் பேத்தி திருமணத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். 2016-ல் பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்