ராணுவ வீரர்களின் சடலத்தில் அரசியல் செய்ய உங்களுக்கு..... பிரதமர் மோடி மம்தா பானர்ஜி கடும் தாக்கு
ராணுவ வீரர்களின் சடலத்தில் அரசியல் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா? என பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி தாக்கி பேசியுள்ளார்.
ஹவுரா,
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் மம்தா பானர்ஜி பேசுகையில், "பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை, அதனால்தான் நீங்கள் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் ராணுவ வீரர்களின் சடலங்களை காட்ட வேண்டியதுள்ளது. நீங்கள் ராணுவ வீரர்களின் சடலங்கள் மீது சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறீர்கள், இதனால் நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? நமது நாட்டிற்காக நமது ஆயுதப்படைகளுக்கு நாம் துணை நிற்கிறோம், ஆனால் மோடி ஆட்சிக்கு ஆதரவாக இல்லை,” என்று கூறினார்.
பாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் பயங்கரவாத பயிற்சி முகாம்களில் நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட விளைவைப் பற்றி கேள்வி எழுப்பியவர்கள் பாகிஸ்தானியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள், நாம் அனைவரும் அயல் நாட்டை சேர்ந்தவர்களாக பார்க்கப்படுகிறோம், மோடி மட்டும் இந்தியர் என சொல்லப்படுகிறார். பிரதமர் மோடி தன்னைமட்டும் தேசப்பற்றாளர் என்று முத்தியிட்டுக்கொள்ள முயற்சி செய்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளார் மம்தா பானர்ஜி.