புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். மேலும், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் சார்ந்த ஒவ்வொரு மாநிலமும் மாறுபட்ட தொகையை இழப்பீடாக வழங்கியுள்ளனர். எனவே ஒரு குடையின் கீழ், வீரர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிகள் இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல என்றும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.