பணிக்கொடை தொகைக்கான வருமான வரிவிலக்கு அதிகரிப்பு - அருண் ஜெட்லி அறிவிப்பு
பணிக்கொடை தொகைக்கான வருமான வரிவிலக்கு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பணிக்கொடை தொகைக்கான வருமான வரிவிலக்கு இதுவரை ரூ.10 லட்சமாக இருந்தது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.
அந்த அறிக்கையில், தனியார் துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகைக்கான வருமான வரிவிலக்கை இரு மடங்காக, அதாவது ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவுக்கும் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பணிக்கொடை தொகைக்கான வருமான வரிவிலக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என இன்று அறிவித்துள்ளார்.