ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இன்று காலை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வதந்திகள் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரால் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.