221 மீட்டர் உயர ராமர் சிலை: குஜராத் உதவியை நாடும் உத்தரபிரதேசம்

221 மீட்டர் உயர ராமர் சிலை அமைப்பது தொடர்பாக, குஜராத் உதவியை உத்தரபிரதேச அரசு நாடியுள்ளது.

Update: 2019-03-04 21:45 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தின் நர்மதா மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை, கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தின் சரயு நதிக்கரையில் 221 மீட்டர் உயரத்தில் ராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இந்த நிலையில், ராமர் சிலையை அமைக்க தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ரீதியில் உதவி செய்யும் படி குஜராத்திடம் உத்தரபிரதேச அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ராமர் சிலையை அமைக்கும் திட்டத்துக்கு குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்