நான் அவரது ரசிகனாகி விட்டேன்; அபிநந்தன் போன்று மீசை வைத்துள்ள பெங்களூருவாசி பேட்டி

நான் அவரது ரசிகனாகி விட்டேன் என விமானி அபிநந்தன் போன்று மீசை வைத்துள்ள பெங்களூருவாசி ஒருவர் கூறியுள்ளார்.

Update: 2019-03-03 07:32 GMT
பெங்களூரு,

காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் கடந்த 26ந்தேதி வந்தன. அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன.  ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.

அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது.  இவர் சென்னையை சேர்ந்தவர்.  இவரது தந்தையும் இந்திய விமான படையின் முன்னாள் அதிகாரி ஆவார்.

இந்த நிலையில், பாகிஸ்தானிடம் பிடிபட்ட அபிநந்தனை ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.  தொடர்ந்து சர்வதேச அளவில் தரப்பட்ட அழுத்தத்தினால் அந்நாடு இதற்கு ஒப்புதல் அளித்தது.  இதன்படி அபிநந்தன் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தனின் துணிச்சலுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், அவரது மீசையும் பிரபலமாகி விட்டது.  இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கி விட்டனர்.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வசித்து வருபவர் முகமது சந்த்.  இவர் விமானி அபிநந்தன் போன்று மீசை வைத்து உள்ளார்.  இதுபற்றி கூறிய சந்த், நான் அவரது ரசிகன்.  நாங்கள் அவரை பின்தொடருகிறோம்.  அவரது ஸ்டைலை நான் விரும்புகிறேன்.  அவரே உண்மையான ஹீரோ.  மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்