அபிநந்தன் எனும் பெயருக்கான அர்த்தமே மாறிவிட்டது, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தமே மாறிவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுடெல்லி
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்றிரவு அவர் நாடு திரும்பினார். விமானப் படையின் உயரதிகாரிகளான ஏர்வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் அபிநந்தனின் விடுதலையைப் பாராட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''வீடு திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். உங்களின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது. நம்முடைய ராணுவப் படைகள் 130 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. வந்தே மாதரம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ''அபிநந்தன் வர்த்தமானை வரவேற்கிறேன். உங்களின் தைரியம், கடமை உணர்வு எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் கண்ணியத்தால் இந்தியா பெருமைப்படுகிறது. நீங்களும் ஒட்டுமொத்த விமானப் படையும் வருங்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
அபிநந்தனை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பெயருடன் 1-ம் எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை, பிசிசிஐ சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.
You rule the skies and you rule our hearts: BCCI welcomes IAF Wing Commander Abhinandan Varthaman
— ANI Digital (@ani_digital) March 1, 2019
Read @ANI Story | https://t.co/E6MIIdwriMpic.twitter.com/exvxuuylAV