பாகிஸ்தான் சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம் - வி.கே.சிங்

பாகிஸ்தான் சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம், ஜெனிவா உடன்படிக்கையின்படி அபிநந்தனை விடுவித்துத்தான் ஆகவேண்டும் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2019-03-01 15:33 GMT
பாகிஸ்தான் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்த பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டி டுவிட்டரில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  ஜெனிவா உடன்படிக்கையின்படி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்துதான் ஆகவேண்டும். சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக உடனடியாக அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்நிலையில்  பாகிஸ்தான் சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

மத்திய அமைச்சர் வி.கே.சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய விமானி அபிநந்தனை விடுவித்தால் பாகிஸ்தான் நமக்கு ஏதோ சாதகம் செய்து விட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஜெனிவா உடன்படிக்கையின்படி,  சேவையில் இருக்கும் ராணுவ வீரர் பிடிபட்டால் அவர்களுடைய சொந்த நாட்டிடம் ஒப்படைத்தாக வேண்டும். இப்படி 1971-க்குப் பிறகு பாகிஸ்தானை சேர்ந்த போர்க் கைதிகள் 90,000 வீரர்களை நாம் விடுவித்துள்ளோம் என்பதை நாம் மறக்கலாகாது,” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்