ராகுல்காந்தியின் அமேதி தொகுதியை வளர்ச்சி பெற செய்வோம் - யோகி ஆதித்யநாத் உறுதி
உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதிக்கு பிரதமர் மோடி 3–ந் தேதி செல்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அமேதி,
முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அமேதிக்கு சென்று இதற்காக ஏற்பாடுகளை கவனித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ராகுல்காந்தியின் தொகுதியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் உறுதிப்பாடு இல்லாததால் அமேதி தொகுதி பல ஆண்டுகளாக பின்தங்கியே உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக இங்கு வளர்ச்சி சக்கரத்தை வேகமாக சுழல விட்டுள்ளோம். விரைவில் அமேதி புத்துயிர் பெறும்’’ என்றார்.