நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக கைகோர்க்கும் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு
நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை, அவரது இல்லத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்–மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
நேற்று இரவு நடந்த இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசை எதிர்த்து இருவரும் கைகோர்க்க முடிவு செய்தனர்.
இதை கெஜ்ரிவால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று சந்திரபாபு நாயுடுவும் கெஜ்ரிவாலுடனான சந்திப்பு பற்றி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.