கல்வி துறைக்கு ரூ.93,847 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.93,847.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.93,847.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.
இதுபற்றி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
2019-20-ம் ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.93,847.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்விக்கு ரூ.37,461.01 கோடியும், பள்ளிக்கல்விக்கு ரூ.56,386.63 கோடியும் ஒதுக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.
‘கல்வியில் புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறை-2022’ என்ற திட்டம் ரூ.1 லட்சம் கோடி மொத்த முதலீட்டில் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் சுகாதார கல்வி நிலையங்கள் உள்ளிட்ட முதன்மையான கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி மற்றும் அதுதொடர்பான கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யப்படும்.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக ரூ.608.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2 புதிய முழு அளவிலான திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள் (எஸ்.பி.ஏ.) தொடங்கப்படும். கூடுதலாக 18 புதிய எஸ்.பி.ஏ.க்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவைகளில் தன்னாட்சி பள்ளிகளாக தொடங்கப்படும்.
கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எனவே கல்வியில் மின்னணு தொழில்நுட்பம் விரைவாக அதிகரிக்கப்படும். படிப்படியாக பள்ளி கரும்பலகைகள் அகற்றப்பட்டு, மின்னணு பலகைகள் (டிஜிட்டல் போர்டு) கொண்டுவரப்படும். அனைத்து பள்ளிகளிலும் மின்னணு பலகைகள் அமைப்பது பற்றி ஆராய்வதற்காக உயர்கல்வி துறை மூலம் ஒரு குழு அமைக்கப்படும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிக்ஷா’ மின்னணு தளம் மூலம் ஆசிரியர்களின் திறமையும் மேம்படுத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.