வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Update: 2019-01-02 14:02 GMT
புதுடெல்லி, 

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின் வங்கித்துறையில், மூன்று வங்கிகளை இணைத்துள்ளது இதுதான் முதல் தடவையாகும். 

மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அண்மையில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்