கயிறின்றி பாறைகளில் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி
டெல்லியில் கயிறின்றி பாறைகளில் ஏறியபோது 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உதவி ஆராய்ச்சியாளர் உயிரிழந்தார்.
டெல்லி,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பிரவீன் திவாரி என்ற 30 வயது என்ற இளைஞர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 30-ம் தேதி ஆராய்ச்சிக்காக பல்கலைகழக வளாகத்தில் உள்ள பாறைகளில் கயிறின்றி ஏறிக்கொண்டிருந்தார்.
மற்றொரு பாறையின் மீது கால் வைத்து மேலே ஏறும் போது திடீரென மண் பாறை உடைந்தது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
கயிறின்றி பாறைகளில் ஏறியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழக உதவி ஆராய்ச்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தது மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.