புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும்

புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என்றும் உத்தரபிரதேசத்தில் 16 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

Update: 2019-01-01 10:57 GMT
புதுடெல்லி,

புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் பிறந்த  3,95,072 குழந்தைகளில்  18 சதவீத  குழந்தைகள்  இந்திய குழந்தைகளாக  இருக்கும் என  யுனிசெப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 69,944 குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  உத்தரபிரதேசத்தில் 16,000  குழந்தைகள் புத்தாண்டு அன்று பிறக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 69, 944 குழந்தைகளும், சீனாவில் 44 ,940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25,685 குழந்தைகளும், பாகிஸ்தானில் 15,112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 11,256 குழந்தைகளும், அமெரிக்காவில் 11,086 குழந்தைகளும் , காங்கோவில் 10,053 குழந்தைகளும், வங்காளதேசத்தில் 8,428 குழந்தைகளும் பிறப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது.

"ஆமாம், ஜனவரி 1-ம் தேதி புதிய குழந்தை வருகைக்கான ஆர்வம் இன்னமும் நீடிக்கிறது. தாய்மார்கள் இந்த ஆண்டின் முதல் நாளில் தங்கள் குழந்தை பிறக்க  வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்" என  மகளிர் நல மருத்துவர்  ஜோத்ஸ்னா  மேத்தா தெரிவித்து உள்ளார்.

2017 ஆம் ஆண்டில் சுமார் 10 லட்சம்  குழந்தைகள் அவர்கள்  பிறந்த நாளிலும், அவர்களது முதல் மாத வாழ்க்கையில் 25 லட்சம் குழந்தைகளும்  இறந்து விட்டனர்.

2017 ஆம் ஆண்டில்  ஒவ்வொரு நாளும் ஏழு ஆயிரம் குழந்தைகள்  இறந்துள்ளனர். இதில் 47 சதவீதம் குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவைகளாகும். முதல் வாரத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு எழுபத்தி ஐந்து சதவீதம் ஆகும். 
இவை  1990 ஆம் ஆண்டு 40 சதவீதமாக இருந்தது. 

உத்தரபிரதேசத்தில் 1,65,000 குழந்தைகள் தங்கள் முதல் மாதத்தில் இறந்துள்ளனர். இவற்றுள் பெரும்பாலானவை முன்கூட்டிய பிறந்ததாலும், பிரசவத்தின் போது சிகிச்சை, செப்சிஸ் மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் ஏற்பட்ட இறப்புகளாகும் என  யுனிசெப் இந்திய பிரதிநிதி யாஷ்மின் அலி ஹக்கியு கூறி உள்ளார்.

"இந்த புத்தாண்டு தினத்தில் உயிர் வாழ்வதற்கான உரிமையுடன் தொடங்கி, ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தைகளின்  ஒவ்வொரு உரிமையையும் நிறைவேற்றுவதற்கான அனைத்து தீர்மானங்களையும் எடுப்போம்" என யாஷ்மின் அலி  ஹக்கியு கூறி உள்ளார்.

"நாம் பயிற்சி அளித்தால் லட்சக்கணக்கான குழந்தைகளை காப்பாற்ற முடியும்" என  யூனிசெப் தலைமைத் பீல்டு அதிகாரி ரூத் லியோனா கூறினார்.

மேலும் செய்திகள்