பாட்னா விமான நிலையத்தில் பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்காவிற்கு விஐபி சலுகை ரத்து
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்காவிற்கு விஐபி சலுகை ரத்து செய்யப்பட்டது.
பாட்னா,
பாட்னா ஜெய் பிரகாஷ் நாராயணன் விமான நிலையத்தின் இயக்குநர் ராஜேந்திர சிங் லாஹவுரியா பேசுகையில், “ இதுவரையில் பாதுகாவலர்கள் சத்ருகன் சின்காவை சோதனை செய்தது கிடையாது, இப்போது அந்த சலுகை ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரான சத்ருகன் சின்கா விமான நிலையத்தில் விமானம் ஏறும் இடம் வரையில் தன்னுடைய வாகனத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக இவ்வசதி கொடுக்கப்பட்டது. ஜூன் வரையில் இந்த சலுகை அவருக்கு நீட்டிக்கப்பட்டது. இப்போது இதனை மேலும் நீட்டிக்க எந்தஒரு உத்தரவும் பெறப்படவில்லை எனவும் ராஜேந்திர சிங் லாஹவுரியா கூறியுள்ளார். சத்ருகன் சின்கா பிரதமர் மோடியை பல்வேறு விஷயங்களில் விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.