தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-01 07:56 GMT
அம்ரோகா,

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி, உத்தரபிரதேசத்தின் அம்ரோகா, லக்னோ, மீரட், ஹாபூர் ஆகிய நகரங்களில் ஹர்க்கத்துல் ஹர்பே இஸ்லாம் என்னும் இயக்கத்தினரின் 17 இடங்களில்  தேசிய புலனாய்வு அமைப்பினர்  கடந்த 26-ந்தேதி  சோதனை  நடத்தினர். அபோது 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

அப்போது ராக்கெட் லாஞ்சர், 12 கைத்துப்பாக்கிகள், 112 அலாரக் கடிகாரங்கள், 100 மொபைல்கள்,  135 சிம் கார்டுகள், மடிக்கணினிகள், துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் இன்றும் உத்தரபிரதேசத்தின் அம்ரோகாவில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்