2019 ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு - போதிய ஆதாரம் இல்லாததால் முடித்து வைப்பதாக சி.பி.ஐ. அறிவிப்பு

விசாரணை அடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு 7 நபர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-01-02 12:32 GMT

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானில் இருந்து சிலர் தகவல்களைப் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், கடந்த 2022-ம் ஆண்டு 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை முடித்து வைப்பதாக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இனி இந்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்கவோ, அல்லது தொடர்ந்து விசாரணையை நடத்தவோ கோர்ட்டு உத்தரவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்