விலை குறைந்ததால் வேதனை: வெங்காயம் விற்ற பணத்தை மோடிக்கு அனுப்பிய விவசாயி
விலை குறைந்ததால் வேதனை அடைந்த விவசாயி ஒருவர், வெங்காயம் விற்ற பணத்தை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
மும்பை,
இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் சரிபாதி அளவை (50 சதவீதம்) மராட்டிய மாநிலத்தின் நாசிக் மாவட்டம்தான் உற்பத்தி செய்கிறது. ஆனால் அங்கு வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதில்லை.
இந்த நிலையில் அங்கு நிபாட் தாலுகாவை சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே, தனது நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 750 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக கடந்த வாரம் மொத்த விற்பனை சந்தைக்கு எடுத்து சென்றார்.
அங்கு 1 கிலோ வெங்காயம் ரூ.1 என்ற அளவில்தான் கொள்முதல் செய்ய முன் வந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் பேச்சு வார்த்தை நடத்தி கடைசியில் 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,064 கிடைத்தது. (கிலோ சுமார் ரூ.1.40).
இவ்வளவு அற்ப விலை கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த சஞ்சய் சாத்தே, அந்தப் பணத்தை அப்படியே பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “ 4 மாதம் வியர்வை சிந்த உழைத்த உழைப்புக்கு கிடைத்துள்ள விலை, வேதனை அளிக்கிறது. எனவேதான் எனது எதிர்ப்பை பதிவு செய்கிற விதமாக அந்த தொகையை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினேன். இதற்கு மணி ஆர்டர் கமிஷன் ரூ.54 கூடுதலாக செலவு செய்திருக்கிறேன்” என்றார்.
இந்த சஞ்சய் சாத்தே, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா 2010-ம் ஆண்டு இந்தியா வந்தபோது, அவருடன் உரையாடுவதற்கு மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த விவசாயிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.