‘இந்துத்துவம் பற்றி அவரிடம் கற்கும் நாள் வராது’ - ராகுல் காந்திக்கு சுஷ்மா சுவராஜ் கண்டனம்

இந்துத்துவம் பற்றி அவரிடம் கற்கும் நாள் வராது என ராகுல் காந்திக்கு சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-01 21:45 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துத்துவத்தின் புரிதல் பற்றி பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தார். அதற்கு வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கடவுள் தடுத்துவிட்டார். இந்துத்துவம் பற்றி ராகுல் காந்தியிடம் நாங்கள் கற்றுக்கொள்ளும் நாள் நிச்சயம் வராது. சமீப தேர்தல் பிரசாரங்களில் ராகுல் காந்தி பிராமணர் என்று பிரகடனப்படுத்தப்படுகிறது. காரணம் அவரது கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு பிராமணர். அதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. ராகுல் புனித நூலுடன் கூடிய பிராமணர் என்கிறார்கள்.

இன்றைக்கு நாங்கள் அவரிடம் இந்து பற்றி கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரது பொது அறிவு அந்த அளவுக்கு விரிவடைந்துவிட்டதா? என எனக்கு தெரியவில்லை. பல காரணங்களால் காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி என ஒன்று இருக்கிறதா? அந்த கூட்டணி கட்சிகள் ராகுலை தலைவராக ஏற்றுக்கொள்கிறதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்