இரட்டை இலை சின்னம் வழக்கு: விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை, 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2018-11-30 22:45 GMT
புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர்பாண்டி, அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் விஸ்வநாதன், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையாளர் பகுதியில் ஆஜராகி இருந்தார். இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்