பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஊழல்வாதிகளுக்கு எதிரானது - நிதி ஆயோக் துணை தலைவர் தகவல்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஊழல்வாதிகளுக்கு எதிரானது என நிதி ஆயோக் துணை தலைவர் தெரிவித்தார்.

Update: 2018-11-30 22:00 GMT
புதுடெல்லி,

நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் ஒரு விழாவில் பேசியதாவது:-

முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ‘மோடி-ஜெட்லியின் பொருளாதார சவால்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார். அதில் பண மதிப்பு இழப்பு பெரியது, கடுமையானது, பண அதிர்ச்சி, பொருளாதார சரிவுக்கு துரிதப்படுத்துவது. இது பெரிய மனிதர்களுக்கு எதிரானது என்று அவர் எழுதியுள்ளதாக அறிகிறேன். அவர் ஏன் இந்த வார்த்தையை குறிப்பிட்டார் என தெரியவில்லை.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை ஊழல்வாதிகளுக்கு, முறையற்ற வகையில் சொத்துகளை குவித்துள்ளவர்களுக்கு எதிரானது. பெரிய மனிதர்கள் என்பது நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், சட்டத்தை மதிப்பவர்கள் என நான் நம்புகிறேன். எனவே இது அவர்களுக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்