நகரை மேம்படுத்த மரங்களை வெட்டுவதா? - உத்தரபிரதேச அரசுக்கு ரூ.5 கோடி அபராதம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நகரை மேம்படுத்த சட்ட விரோதமாக மரங்களை வெட்டப்பட்டதாக, உத்தரபிரதேச அரசுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-02 21:30 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சாக் கஜாரியா நகரை உயர் தொழில்நுட்ப நகராக மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுமார் 8 ஆயிரம் மரங்கள், முறையான அனுமதியுடன் வெட்டி சாய்க்கப்பட்டன. சட்டவிரோதமாகவும் மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உயிரினங்களின் வாழ்க்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு, இவ்வழக்கு பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது.

அதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், உத்தரபிரதேச அரசுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது. இதை 3 மாத காலத்துக்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு செலுத்த தவறினால், ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்