கேரளா ஜிகாதி குழுக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆதரவு மையங்களை திறிந்து உள்ளன- புலனாய்வுத்துறை எச்சரிக்கை
கேரளாவில் கைது செய்ய வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஜிகாதி குழு வியாபார மையங்களை திறப்பதாக மத்திய புனலாய்வுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி
கேரளாவில் தீவிரவாதிகளுடன் தொடர்பு உடைய ஒரு கேரள குழு உள்ளது. இந்த குழு கைது செய்யப்படுவதைத் தடுக்க இந்தியாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு வேலை வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிரேட் வர்த்தக மையங்களை திறந்துள்ளது புலனாய்வுத்துறை அறிக்கை கூறுகிறது.
உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, இந்த குழு கேரளாவில் கைது செய்யப்பட்டு பின்னர் வளைகுடா நாடுகளில் மறைத்து வைத்திருக்கும் குற்றவாளிகளில்பலருக்கு வேலை வழங்கியுள்ளது என கூறப்பட்டு உள்ளது. இந்த குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் டஜன் கணக்கான கடைகளை திறந்து உள்ளது.
ஜீ நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் இந்த குழு தன்னார்வ தொண்டர்கள் குழுவைக் கொண்டிருப்பதாக தன்னை வெளிப்படுத்துகிறது. இந்த குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொருளாதார ரீதியாக பலவீனமான இந்தியரை அணுகி இஸ்லாமிற்கு மாற்றுவதற்கு ஊக்குவிக்கின்றனர். இந்த புதிய மாற்றங்கள் இஸ்லாமிய 'தவா' நடவடிக்கைகள் அல்லது இஸ்லாமிற்கான அழைப்பின் பெயரில் நிதி சேகரிக்கவும் கேட்கப்படுகின்றன.
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சரி நகரில் உள்ள சத்ய சாரணியைச் சந்திக்கும்படி அறிவுரை மற்றும் நிதி உதவி வழங்க கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்ய சாரணி என்பது கட்சி ஒன்றின் மத அமைப்பு என கூறப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளில் பங்கு பெற்ற முஸ்லிம்களின் நீதிமன்ற வழக்குகளை நிர்வகிப்பதற்காக கேரளாவில் ஒரு ஜிகாதி குழு ரூ. 3 கோடி வசூலித்து வருகிறது. அதன் உறுப்பினர்கள் கத்தாரில் இருந்து ஹவாலா சேனல்கள் மூலம் கேரளாவுக்கு பணத்தை அனுப்புகிறது என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தகவல் படி, 54 பேருக்கு மேட்பட்ட இளைஞர்கள் கேரளாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து உள்ளனர்.
குற்றவியல் பின்னணியிலும், குற்றவாளிகளிலும் எத்தனை ஜிஹாதி குழுக்கள் ஐக்கிய அரபு நாடுகளில் மறைக்கப்படுகின்றன மற்றும் கேரள தலைவர்கள் யார் யாருக்கு இந்த நெட்வொர்க்குடன் தொடர்பு உள்ளது என்பதை நாம் அறிய முயல்கிறோம் என அதிகாரி கூறி உள்ளார்.